ஆகஸ்ட் 18 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் ரூபாயின் பணவீக்கம் 3.94 விழுக்காடாக குறைந்துள்ளது!
ரூபாயின் பணவீக்க விகிதம் அதற்கு முந்தைய வாரத்தில் 4.10 விழுக்காடாக இருந்தது. கடந்த ஆண்டு இதே வாரத்தில் அது 5.12 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலக உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைந்ததன் காரணமாக ரூபாயின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதாக இந்திய மைய வங்கி அறிக்கை கூறுகிறது.