Newsworld Finance News 0708 24 1070824007_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாயின் பண வீக்கம் : 4.10 விழுக்காடாக உயர்வு

Advertiesment
ரூபாயின் பண வீக்கம் : 4.10 விழுக்காடாக உயர்வு
உணவு பொருட்கள், தொழிலக உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வால் ரூபாயின் வாங்கும் சக்தி 0.05 விழுக்காடு குறைந்துள்ளது.

ஆகஸ்ட் 4ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.05 விழுக்காடாக இருந்த பண வீக்க விகிதம் ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.10 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே வாரத்தில் பண வீக்க விகிதம் 5.07 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கோதுமை, அரிசி, பருப்பு வகைகளின் உற்பத்தி முழுமையாக சந்தையை வந்தடையும் வரை உணவுப் பொருட்களின் விலையின் மீதான அழுத்தம் தொடரும் என்று கூறிய நிதியமைச்சர் சிதம்பரம், பண வீக்கத்தை 4 விழுக்காடு அளவிற்கு கட்டுப்பாட்டில் கொண்டு வரவே அரசு விரும்புகிறது என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil