இந்திய மைய வங்கி (ஆர்.பி.ஐ.) இன்று வெளியிட்ட நாணயக் கொள்கையின் முதல் காலாண்டு முடிவுகள் வரவேற்கத்தக்கதாக உள்ளன என்று இந்திய தொழிலக கூட்டமைப்பு கூறியுள்ளது!
வங்கி வட்டி விகிதம், ரீப்போ, ரிசர்ஸ் ரீப்போ ஆகியவற்றில் மாற்றமில்லை என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும், வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் 7 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருப்பதால் அதிகப்படியான பணப் புழக்கம் கட்டுப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்று இந்திய தொழிலக கூட்டமைப்பு கூறியுள்ளது.
ஆயினும், இப்படிப்பட்ட நிதிநிலை சந்தையில் இருந்து சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிதி புரட்டும் வாய்ப்பை பெரிதும் பாதிக்கும் என்று ·பிக்கியும் கூறியுள்ளது.
இந்திய மைய வங்கி அறிவித்த நாணயக் கொள்கை விளைவால் மும்பை பங்குச் சந்தைக் குறியீடு இன்று மட்டும் 290 புள்ளிகள் உயர்ந்தது.