Newsworld Finance News 0707 31 1070731021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : ஆர்.பி.ஐ.!

Advertiesment
இந்திய மைய வங்கி (ஆர்.பி.ஐ.) வங்கி வட்டி விகிதம்
வங்கிகளுக்கு அளிக்கும் நிதியின் மீதான வட்டி விகிதம், ரீப்போ மற்றும் ரிவர்ஸ் ரீப்போ விகிதங்களில் எந்மாற்றமும் இல்லை என்று இந்திய மைய வங்கி (ஆர்.பி.ஐ.) ஆளுநர் வேணுகோபால் ரெட்டி கூறியுள்ளார்!

2007-08 நிதியாண்டிற்கான நாணயக் கொள்கை குறித்த முதல் காலாண்டின் நிலவரத்தை மும்பையில் இன்று வெளியிட்ட இந்திய மைய வங்கி ஆளுநர் வேணுகோபால் ரெட்டி, வங்கிகள் மைய வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க இருப்பு விகிதாச்சாரத்தை 50 அடிப்படைகள் புள்ளிகள் உயர்த்தி 7 விழுக்காடாக அதிகரித்திருப்பதாகவும், அது ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி இந்த நிதியாண்டில் 8.5 விழுக்காடாக இருக்கும் என்றும், பண வீக்கத்தை 4 முதல் 4.5 விழுக்காடு அளவிற்கு நிலை நிறுத்த செயல்பட்டு வருவதாகக் கூறினார். (ஏ.என்.ஐ.)

Share this Story:

Follow Webdunia tamil