Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பவானி ஆற்றில் தண்ணீர் விடுவது மீண்டும் அதிகரிப்பு

பவானி ஆற்றில் தண்ணீர் விடுவது மீண்டும் அதிகரிப்பு

Webdunia

பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவில் தடுமாற்றம் நிலவி வருவதால் பவானி ஆற்றில் விடும் தண்ணீரின் அளவும் மாறி மாறி விடப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பவானிசாகர் அணை. இந்த அணை தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையாகும். இது தவிர தென் இந்தியாவின் மிகப்பெரிய மண் அணையும் பவானிசாகர் அணையே ஆகும். இந்த அணையின் மொத்த உயரம் 120 அடியாகும்.

ஆரம்ப காலத்தில் மொத்த உயரமான 120 அடியும் நீர்பிடிப்பு பகுதியாக விளங்கியது. ஆனால் தற்போது உத்தேசமாக அணையில் 15 அடி சகதிகள் இருப்பதாக கணக்கிடப்படுகிறது.

இதன் காரணமாக அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாகும். கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பவானிசாகர் அணை நிரம்பும். ஆகவே விவசாயிகளுக்கு கீழ்பவானி வாய்க்கால் மூலம் தொடர்ந்து இருபோகமும் தண்ணீர் விடப்பட்டிருந்தது.

இதேபோல் பவானி ஆற்றிலும் தண்ணீர் தொடர்ந்து சென்று வந்தது. இந்த நிலையில் கடந்த 1994 ம் ஆண்டுக்கு பின் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்த காரணத்தால் அணை நிரம்பும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

அதன்பின் தற்போதுதான் பவானிசாகர் அணை நிரம்பும் நிலைக்கு வந்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 9700 கனஅடி வந்தது. அணையின் நீர்மட்டம் 104.15 ஆக இருந்தது.

இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 3ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் திங்கட்கிழமை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5511 கனஅடியாக குறைந்தது. இதன் காரணமாக பவானி ஆற்றிலும் தண்ணீர் விடுவது வினாடிக்கு 1100 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 104.27ஆக இருந்தது.

நேற்று ஆறு மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3800கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 104.29ஆக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றிற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் விடுவது அதிகரிக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil