இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 384.92 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19902 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 129.65 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5910 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
பங்குச்சந்தையின் நிறைவில் இன்று, சிசா கோவா, பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ, டாடா பவர் மற்றும் டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், ஹிந்துஸ்தான் யூனியன் மற்றும் ஐடிசி லிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.