Publish Date: Mon, 09 Feb 2009 (11:45 IST)
Updated Date: Mon, 09 Feb 2009 (11:44 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா அதிகரித்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.57 என்ற அளவில் இருந்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 11 பைசா குறைவு.
வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.48.68.
வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.57 முதல் ரூ.48.62 என்ற அளவில் இருந்தது.
ஆசிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இந்திய பங்குச் சந்தையிலும் சாதகமான நிலை இருந்தது. அந்நிய முதலீடு அதிகம் வரும் என்ற கருதப்படுகிறது.
இத்துடன் டாலரின் விலை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பில், பெட்ரோலிய நிறுவனங்கள் உட்பட இறக்குமதியாளர்கள் டாலரை வாங்குவதில் தயக்கம் காண்பிக்கின்றனர். இதுவே டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
Webdunia
Publish Date: Mon, 09 Feb 2009 (11:45 IST)
Updated Date: Mon, 09 Feb 2009 (11:44 IST)