வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.72 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 5 பைசா குறைவு.
நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.77.
வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.68 முதல் ரூ.48.78 என்ற அளவில் இருந்தது.
ஜப்பானிய நாணயமான யென்னுக்கு எதிரான டாலரின் மதிப்பு குறைந்தது. அத்துடன் பங்குச் சந்தையிலும் சாதகமான நிலை இருந்தது. இறக்குமதியாளர்கள் டாலரை வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால் டாலரின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.