Newsworld Finance Market 0902 06 1090206007_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை உயர்வு

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி NSEnifty BSEsensex
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

காலை 10.16 மணியளவில், சென்செக்ஸ் 106.61, நிஃப்டி 40.65 புள்ளிகள் அதிகரித்தன.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் துவங்கும் போதே, எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 1.23, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 13.92, ஜப்பானின் நிக்கி 95.88, ஹாங்காங்கின் ஹாங்செங் 187.66, சீனாவின் சாங்காய் காம்போசிட் 40.92 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்றஎல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. டோவ் ஜோன்ஸ் 106.41, எஸ் அண்ட் பி 500- 13.62, நாஸ்டாக் 31.19 புள்ளி உயர்ந்தது.

ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் நேற்று சிலவற்றில் உயர்ந்தும், மற்றவைகளில் குறைந்தும் இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-0.33 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.31 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 47.20 (NSE-nifty) புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 2,827.25 ஆக உயர்ந்தது.

இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 143.15 (BSE-sensex) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,234.03 ஆக அதிகரித்தது.

மிட் கேப் 4.83, பி.எஸ்.இ. 500- 26.24, சுமால் கேப் 9.43 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.23 மணியளவில் 842 பங்குகளின் விலை அதிகரித்தும், 457 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 38 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நிகரமாக ரூ.26.97 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அதே பல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் நிகரமாக ரூ.100.72 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil