Newsworld Finance Market 0902 02 1090202009_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை இன்றும் சரிவு

Advertiesment
சீனா நிஃப்டி NSEnifty சென்செக்ஸ் BSEsensex
மும்பை: , திங்கள், 2 பிப்ரவரி 2009 (10:35 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, மிட் கேபே நீங்கலாக மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, இன்று ஆசிய நாடுகளில் சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ் தவிர மற்ற பங்குச் சந்தைகளும் சரிவை எதிர்கொண்டன.

காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 132.59, நிஃப்டி 40.10 புள்ளிகள் குறைந்தன.

இன்று சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 24.82, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 11.19, 157.60, ஜப்பானின் நிக்கி 157.60, ஹாங்காங்கின் ஹாங்செங் 365.23, புள்ளிகள் குறைந்தது. ஆனால் சீனாவின் சாங்காய் காம்போசிட் 10.20 புள்ளிகள் அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை குறியீட்டு எண்கள் சரிந்தன. டோவ் ஜோன்ஸ் 148.15, நாஸ்டாக் 31.42, எஸ் அண்ட் பி 500- 19.26 புள்ளிகள் சரிந்தன.

ஐரோப்பிய நாடுகளிலும் வெள்ளிக் கிழமை சிலவற்றில் சாதகமாகவும், சிலவற்றில் பாதகமாகவும் இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-40.47 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.25 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 72.55 (NSE-nifty) புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 2,802.25 ஆக இருந்தது.

இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 227.24 (BSE-sensex) புள்ளிகள் சரிந்து, குறியீட்டு எண் 9,197.00 ஆக குறைந்தது.

மிட் கேப் 10.93, பி.எஸ்.இ. 500- 62.91, சுமால் கேப் 11.49 புள்ளிகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.23 மணியளவில் 544 பங்குகளின் விலை அதிகரித்தும், 745 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 57 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை நிகரமாக ரூ.64.15 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நிகரமாக ரூ.398.39 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil