பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன. பிறகு நிலைமை சிறுது மாறி, படிப்படியாக அதிகரிக்க துழங்கின.
நண்பகல் 12.15 மணியளவில் இரண்டு பங்குச் சந்தைகளிலும், தகவல் தொழில் நுட்பம் தவிர, மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
மதியம் 1 மணிக்கு தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 10.95 (NSE-nifty) புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 2,834.90 ஆக இருந்தது.
இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 39.18 (BSE-sensex) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,275.46 ஆக உயர்ந்தது.
மிட் கேப் 8.80, பி.எஸ்.இ. 500- 16.17, சுமால் கேப் 10.53 புள்ளிகள் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் மதியம் 1.07 மணியளவில் 1075 பங்குகளின் விலை அதிகரித்தும், 1035 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 112 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஆனால் இதே நிலை நீடிக்குமா என்பது கேள்விக்குறியே.