Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிஃப்டி 25-சென்செக்ஸ் 21 புள்ளி சரிவு

நிஃப்டி 25-சென்செக்ஸ் 21 புள்ளி சரிவு
மும்பை , வியாழன், 29 ஜனவரி 2009 (17:41 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், பிறகு தொடர்ந்து குறைய துவங்கின. காலை 11.30 மணிக்கு பிறகு நேற்றைய இறுதி நிலவரத்தை விட குறைந்தது. கடைசி வரை ஏற்ற இறக்கமாக இருந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 21.19 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,236.28 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 25.55 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,823.95 ஆக சரிந்தது.

அதே போல் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 11.36, சுமால் கேப் 01.57, பி.எஸ்.இ 500- 16.42 புள்ளிகள் குறைந்தன.

இன்று தேசிய பங்குச் சந்தையில் நடந்த வர்த்தகத்தில் மாருதி பங்கு விலை 4.59%, மகேந்திரா அண்ட் மகேந்திரா 3.92%, ஹின்டால்கோ 3.83%, டாடா மோட்டார்ஸ் 3.68%, டாடா ஸ்டீல் 3.67%, பாரத் பெட்ரோலியம் 2.95%, ரிலையன்ஸ் பவர் 1.85%, இன்போசிஸ் 1.82%, ஹெச்.டி.எப்.சி 1.70%, ஹீரோ ஹோன்டா 1.54%, எவினிக்ஸ் அசோசரிஸ் 20%, துல்சி எக்ஸ்டரக்சன் 18.15%, குஜராத் ஸ்டேட் பெர்டிலைசர்17.42%, ஜே.எஸ்.எல் லிமிடெட் 16.62%, ஜே.ஹெச்.எஸ் லேபரட்டரிஸ் 14.83%, வினய்ல் இந்தியா 13.33%, கிவல் கிரான் கிளோதிங் 13.13%, காட்ப்ரி பிலிப்ஸ் 12.84%, ஹைதராபாத் இன்டஸ்டிரிஸ் 11.94 அதிகரித்தது.

அதே நேரத்தில் ஓரியன்ட் பிரஸ் பங்கு விலை 26.09%,
டைன்வாலா கெமிக்கல்ஸ் 13.93%, குமின்ஸ் இந்தியா 13.92%, டயாகாம் சிஸ்டம்ஸ் 12.50%, ஆம்டெக் ஆட்டோ 11.03%, சத்யம் கம்ப்யூட்டர் 10.16%, டபிள்யூ. எஸ் இன்டஸ்டிரிஸ் 9.46%, ஆர்சிட் கெமிக்கல்ஸ் 9.02%, சாரா பெர்பாமன்ஸ் பைபர் 8.97% மேக்ஸ் இந்தியா 8.30% குறைந்தது.

அதே போல் டி.எல்.எப் பங்கு விலை 7.55%, கேரின் இந்தியா 6.91%, ஹெச்.சி.எல் டெக் 4.17%, அம்புஜா சிமென்ட் 4.03%, பர்தி ஏர்டெல் 3.80%, சீமென்ஸ் 3.64%, ரிலையன்ஸ் கேப்பிடல் 3.40%, ஜூ என்டர்டெய்மென்ட் 3.29%, ஏ.பி.பி 3.22%, விப்ரோ 2.93%, குறைந்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1148 பங்குகளின் விலை அதிகரித்தது. 1261 பங்குகளின் விலை குறைந்தது. 96 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில
ரியல் எஸ்டேட் பிரிவு குறியீட்டு எண் 2.77%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 2.01%, மின் உற்பத்தி பிரிவு 1.27%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 0.88%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 0.88%, தொழில் நுட்ப பிரிவு 0.74% குறைந்தன.

அதே நேரத்தில் உலோக உற்பத்தி பிரிவு 0.44%, வாகன உற்பத்தி பிரிவு 1.34%, வங்கி பிரிவு 0.30%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.04%, அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil