மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், இறுதி வரை குறையவில்லை.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 329.73 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,004.08 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 92.80 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,771.35 ஆக உயர்ந்தது.
அதே போல் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 17.68, சுமால் கேப் 11.00, பி.எஸ்.இ 500- 88.00 புள்ளிகள் அதிகரித்தன.
இன்று தேசிய பங்குச் சந்தையில் நடந்த வர்த்தகத்தில் சத்யம் கம்ப்யூட்டர் பங்கு விலை 21.62%, அக்ரோ டெக் புட்ஸ் லிமிடெட் 20.05%, பன்சாலி இன்ஜினியரிங் பாலிமர்ஸ் லிமிடெட் 19.63%, இந்தியா புல்ஸ் செக்யூரிட்டிஸ் 18.39%, ஹாங்யங் டாய்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ் 18.20%, படேல் இன்டிகிரேடிட் லாஜிஸ்டிக் 17.32%, ஆர்கிள் பைனான்ஸியல் சரிவீஸ் சாப்ட்வேர் 15.69%, லோகேஷ் மெஷின்ஸ் 15.44%, அரவிந்தோ பார்மா 14.63%, டைனகான் சிஸ்டம்ஸ் அண்ட் சொலியூசன் 14.29%, ஸ்டெர்லைட் 11.77%, ரிலையன்ஸ் இன்ப்ரா 10.69%, ஜூ என்டர்டெய்ன்மென்ட் 7.15%, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 6.86%, சன் பார்மா 6.49%, கேரின் 6.12%, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் 6.04%, விப்ரோ 5.85%, ரான்பாக்ஸி 5.72%, என்.டி.பி.சி 5.70% அதிகரித்தன.
அதே நேரத்தில் நியோகியூர் தெர்பார்டிக்ஸ் பங்கு விலை 19.79%, வாப்கோ-டி.வி.எஸ் 15.73%, காமதேனு இஸ்பாட் 15.54%, சாப்ட்புரோ சிஸ்டம்ஸ் 14.45%, ஐ.எம்.பி பவர் 13.15%, பி.வி.பி வென்சர் 13.01%, ஏஷியன் பெயின்ட் 12.96%, ஆல்கிலி அமீன்ஸ் கெமிகல்ஸ் 11.92% முக்தா ஆர்ட்ஸ் 11.18%, ஹைடெக் கியர் 10.81% குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1217 பங்குகளின் விலை அதிகரித்தது. 1168 பங்குகளின் விலை குறைந்தது. 100 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் உலோக உற்பத்தி பிரிவு குறியீட்டு எண் 5.55%, மின் உற்பத்தி பிரிவு 4.66%, ரியல் எஸ்டேட் பிரிவு 2.19%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 1.55%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 1.25%, வாகன உற்பத்தி பிரிவு 1.72%, வங்கி பிரிவு 2.91%, தொழில் நுட்ப பிரிவு 4.39%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 4.05%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 3.35% அதிகரித்தது.