Newsworld Finance Market 0901 27 1090127008_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை உயர்வு

Advertiesment
நிஃப்டி NSEnifty சென்செக்ஸ் BSEsensex தேசிய பங்குச் சந்தை மும்பை பங்குச் சந்தை
பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 181.90, நிஃப்டி 54.65 புள்ளிகள் உயர்ந்தன.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில், இன்று காலை சீனா, ஹாங்காங், தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தையில் பாதகமான நிலை நிலவியது.

சீனாவின் சாங்காய் காம்போசிட் 14.29, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 23.54, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 22.83, ஹாங்காங்கினஹாங்செங் 79.39 புள்ளிகள் குறைந்தது.

ஜப்பானின் நிக்கி 343.52 புள்ளிகள் அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை டோவ் ஜோன்ஸ் 38.47, நாஸ்டாக் 12.17, எஸ் அண்ட் பி 500-4.62 புள்ளிகள் அதிகரித்தன.

ஐரோப்பிய நாடுகளில் மற்ற எல்லா பங்குச் சந்தைகளிலும் வெள்ளிக் கிழமை குறியீட்டு எண்கள் அதிகரித்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-156.54 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 45.55 (NSE-nifty) புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 2,724.10 ஆக அதிகரித்தது.

இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 157.93 (BSE-sensex) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 8,832.28 ஆக அதிகரித்தது.

மிட் கேப் 18.49, பி.எஸ்.இ. 500- 45.36, சுமால் கேப் 11.90 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.25 மணியளவில் 810 பங்குகளின் விலை அதிகரித்தும், 537 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 49 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை நிகரமாக ரூ.522.91 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நிகரமாக ரூ.203.98 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil