பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் அதிகரித்தும் கூட, இன்று காலை 9 ஆயிரத்தை எட்டவில்லை.
காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 23.37, நிஃப்டி 6.25 புள்ளிகள் குறைந்தன.
ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில், இன்று காலை தைவான் தவிர மற்றவைகளில் பாதகமான நிலை நிலவியது.
சீனாவின் சாங்காய் காம்போசிட் 3.98, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 7.99, ஜப்பானின் நிக்கி 216.59, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 20.19, ஹாங்காங்கின் ஹாங்செங் 24.12 புள்ளிகள் குறைந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 105.30, நாஸ்டாக் 41.58, எஸ் அண்ட் பி 500-12.74 புள்ளிகள் குறைந்தன.
ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம், சுவிடசர்லாந்து தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் நேற்று சரிவை சந்தித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-7.65 புள்ளிகள் குறைந்தது.
ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் கடந்த ஒன்றரை மாதங்களில் இல்லாத அளவிற்கு, இன்று குறியீட்டு எண்கள் குறைந்தன. இதனால் மற்ற நாட்டு அந்நியச் செலவாணிக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது. இந்திய பங்குச் சந்தையில் இருந்து அதிக அளவு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. காலையில் அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போதே. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. டாலரின் மதிப்பு 10 பைசா அதிகரித்தது.
இந்த மாதம் மட்டும் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 4.055.27 கோடி (920 மில்லியன் டாலர்) மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 22.65 (NSE-nifty) புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 2,691.15 ஆக குறைந்தது.
இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 84.58 (BSE-sensex) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 8,729.26 ஆக குறைந்தது.
மிட் கேப் 41.59, பி.எஸ்.இ. 500- 36.81, சுமால் கேப் 31.43 புள்ளிகள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.22 மணியளவில் 431 பங்குகளின் விலை அதிகரித்தும், 795 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 53 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நிகரமாக ரூ.304.45 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நிகரமாக ரூ.3.96 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.