Newsworld Finance Market 0901 21 1090121088_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிஃப்டி 90 -சென்செக்ஸ் 321 புள்ளி சரிவு

Advertiesment
சென்செக்ஸ் மும்பை பங்குச் சந்தை தேசிய பங்குச் சந்தை நிஃப்டி ஹெச்சிஎல் டெக் சிப்லா ஹீரோ ஸ்டெர்லைட் டாடா ரிலையன்ஸ்
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சரிந்த குறியீட்டு எண்கள், நாள் முழுவதும் மாற்றத்துடன் இருந்தன. சுமார் 2.30 மணியளவில் மேலும் குறைய துவங்கியது.

காலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 9 ஆயிரத்திற்கும் குறைந்து.

பிறகு அதிகரித்தாலும், மதியத்திற்கு பின் குறைந்ததால், இறுதியில் 9,000 க்கும் குறைந்தது.


வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 321.38 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 8,779.17 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 90.45 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,706.15 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 59.50, சுமால் கேப் 66.44, பி.எஸ்.இ 500- 101.13 புள்ளிகள் குறைந்தன.

இன்று தேசிய பங்குச் சந்தையில் நடந்த வர்த்தகத்தில் ஹெச்.சி.எல் டெக் பங்கு விலை 4.19%, ஹிந்துஸ்தான் லீவர் 3.68%, நேஷனல் அலுமினியம் 1.78%, அம்புஜா சிமென்ட் 1.44%, சிப்லா 1.35%, ஹீரோ ஹோன்டா 0.56%, ஐ.டி.சி 0.35%, அவின்டிஸ் 5.41%, நிர்மா 2.82%, ஜி.எம்.ஆர் இன்ப்ராக்சர் 1.34%, குமின்ஸ் இந்தியா 1.00%, பயோகான் 0.98%, அல்ட்ரா சிமென்ட் 0.19% அதிகரித்தன.

அதே நேரத்தில் ஸ்டெர்லைட் பங்கு விலை 7.84%, ஹெச்.டி.எப்.சி 7.55%, டாடா பவர் 7.06%, ஐ.சி.ஐ.சிய ஐ பாங்க் 6.80%, பவர் கிரிட் 6.67%, செயில் 6.60%, கிரேசம் 5.81%, ரிலையன்ஸ் இன்ப்ரா 5.63%. ரிலையன்ஸ் கேப்பிடல் 5.59% குறைந்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 720 பங்குகளின் விலை அதிகரித்தது. 1669 பங்குகளின் விலை குறைந்தது. 104 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் உலோக உற்பத்தி பிரிவு குறியீட்டு எண் 4.07%, மின் உற்பத்தி பிரிவு 3.91%, வங்கி பிரிவு 3.91%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 3.78%, ரியல் எஸ்டேட் பிரிவு 3.61%, தொழில் நுட்ப பிரிவு 3.11%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 3.05%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 2.66%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.92%, வாகன உற்பத்தி பிரிவு 1.34% குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil