Newsworld Finance Market 0901 21 1090121054_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாய் மதிப்பு 4 பைசா உயர்வு

Advertiesment
ரிசர்வ் வங்கி டாலர் யூரோ யென்
மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில், காலையில் வர்த்தகம் தொடங்கிய போது இருந்த நிலை அடுத்த அரை மணி நேரத்திலேயே மாறியது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.29 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 9 பைசா குறைவு.

அதற்கு பிறகு நிலைமை மாறியது காலை 10.30 மணியளவில், டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க துவங்கியது.
1 டாலர் ரூ.49.16-ரூ.49.18 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 4 பைசா உயர்வு.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.49.20.

இன்று அந்நியச் செலவாணி சந்தையில் டாலர் ரூ.49.16 முதல் ரூ.49.40 என்ற அளவில் விற்னையாகும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்தால், டாலரின் தேவை அதிகரிக்கும். பங்குச் சந்தை நிலவரத்தை பொறுத்தே, அந்நியச் செலவாணி சந்தையிலும் டாலரின் விலையில் மாற்றம் இருக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா குறைந்தது.

இதற்கு காரணம் ஆசிய நாட்டு சந்தைகளில் பாதகமான நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையில் இன்றும் குறியீட்டு எண்கள் குறைந்தன. அத்துடன் மற்ற நாட்டு அந்நியச் செலவாணி சந்தையில், டாலர் மதிப்பு அதிகரித்தது. இதை போன்றே இந்தியாவிலும் ரூபாயக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.49.21 பைசா
1 யூரோ மதிப்பு ரூ.63.61
100 யென் மதிப்பு ரூ.54.65
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.68.35.

Share this Story:

Follow Webdunia tamil