Newsworld Finance Market 0901 20 1090120009_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை சரிவு

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி ஜப்பானின் நிக்கி ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து NSEnifty BSEsensex
மும்பை: பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் சரிந்தன.

காலை 10.00 மணியளவில் சென்செக்ஸ் 217.41, நிஃப்டி 67.15 புள்ளிகள் சரிந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சநதைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே. எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 42.71, ஜப்பானின் நிக்கி 239.34, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 23.20, சீனாவின் சாங்காய் காம்போசிட் 24.30, ஹாங்காங்கினஹாங்செங் 443.97 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று விடுமுறை.

ஐரோப்பிய நாடுகளிலும் நேற்று எல்லா பங்குச் சந்தைகளும் சரிவை கண்டன. பிரிட்டனின் முக்கியமான வங்கியான ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து, 28 பில்லியன் பவுன்ட் நஷ்டம் அடையும் என்று அறிவித்தது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன.
பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-38.59 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.45 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 81.10 (NSE-nifty) புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 2846.20 ஆக குறைந்தது.

இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 367.87 (BSE-sensex) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 9,061.70 ஆக குறைந்தது.

மிட் கேப் 36.41, பி.எஸ்.இ. 500- 81.45, சுமால் கேப் 22.88 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.49 மணியளவில் 529, பங்குகளின் விலை அதிகரித்தும், 1011 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 56 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.363.37 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.275.97 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil