மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஏற்ற இறக்கத்துடன் ஆரம்பித்த நிலைமை இறுதி வரை மாறமல் இருந்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 5.98 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,329.57 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 17.75 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 2,846.20 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 16.70, சுமால் கேப் 38.69, பி.எஸ்.இ 500- 11.29 புள்ளிகள் அதிகரித்தன.
இன்று நடந்த வர்த்தகத்தில் யூனிடெக் நிறுவன பங்கு விலை 8.49%, சுல்ஜான் 7.72%, செயில் 4.62%¸ ஸ்டெர்லைட் 4.02%, பவர் கிரிட் 3.85%, அம்புஜா சிமென்ட் 3.60%, ஒ.என்.ஜி.சி 3.32%, கெயில் 2.70%, டாடா ஸ்டீல் 2.21%, ஜே.பி.அசோசியேட் 4.85%¸ ஜி.எம்.ஆர் இன்ப்ரா 4.81%, பாரத் போர்ஜிங் 3.36, ஆந்திரா பாங்க் 2.95%, விஜயா பாங்க் 2.85%, அல்ட்ரா சிமென்ட் 2.71%, பட்னி 2.68%, சிண்டிகேட் பாங்க் 2.42% அதிகரித்தன.
அதே நேரத்தில் மகேந்திரா அண்ட் மகேந்திரா பங்குகளின் விலை 4.71%, கிரேசம் 2.93%, விப்ரோ 2.92%, மாருதி 2.67%, ஐ.சி.ஐ.சி.ஐ பாங்க் 2.63%, டாடா மோட்டார்ஸ் 1.86%, ஹெச்.சி.எல் டெக் 1.61%, சிப்லா 1.61%, லுபின் 1.62%, மோசர்பியர் 4.11%, முந்த்ரா போர்ட் 3.40%, ஐ.என்.ஜி வைஸ்யா பாங்க் 1.40%, கோடக் மகேந்திரா 1.25% குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1353 பங்குகளின் விலை அதிகரித்தது. 1024 பங்குகளின் விலை குறைந்தது. 95 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில்
ரியல் எஸ்டேட் பிரிவு குறியீட்டு எண் 2.17%, உலோக உற்பத்தி பிரிவு 1.85%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 1.46%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 1.32%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 0.79%, மின் உற்பத்தி பிரிவு 1.46%, தொழில் நுட்ப பிரிவு 0.47%, அதிகரித்தது.
வங்கி பிரிவு 0.97%, வாகன உற்பத்தி பிரிவு 0.38%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.75% குறைந்தது.