வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா அதிகரித்தது.
ஆசிய நாட்டு சந்தைகளில் சாதகமான நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையிலும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யும். இதனால் டாலர் வரத்து இருக்கும், அத்துடன் மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்ததால் ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.64 என்ற அளவில் இருந்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 15 குறைவு.
வெள்ளி கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.48.70- 48.80 பைசா.
வெள்ளிக் கிழமையும் இந்திய ரூபாயின் மதிப்பு 24 பைசா அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.