Publish Date: Sat, 17 Jan 2009 (10:14 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:34 IST)
லாரிகள் வேலைநிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால் விலைகள் கடுமையாக குறைந்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து அதிகரித்தது. இதனால் விலைகள் கடுமையாக குறைந்தது. விலைகள் உயர்ந்திருந்தபோது போட்டி போட்டுக் கொண்டு வாங்கிய சில்லறை வியாபாரிகள் தற்போது குறைந்த அளவே காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் மார்க்கெட்டில் காய்கறிகள் குவிந்து கிடக்கின்றன. கோஸ், கேரட், பீட்ரூட், சவ்சவ், கத்தரிக்காய், அவரைக்காய், மிளகாய், தக்காளி ஆகியவற்றின் விலைகள் கடுமையாக குறைந்துள்ளது.
காய்கறி, பழங்கள், பூக்கள் விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
கோஸ் ரூ.06
கேரட் ரூ.10
பீட்ரூட் ரூ.10
சவ்சவ் ரூ.08
நூக்கோல் ரூ.07
முள்ளங்கி ரூ.05
வெள்ளரிக்காய் ரூ.03
பீன்ஸ் ரூ.10
கத்திரிக்காய் ரூ.07
அவரைக்காய் ரூ.10
புடலங்காய் ரூ.10
வெண்டைக்காய் ரூ.10
மிளகாய் ரூ.10
குடை மிளகாய் ரூ.15
முருங்கைகாய் ரூ.30
இஞ்சி ரூ.30
தேங்காய் (ஒன்று) ரூ.08
சேனைக் கிழங்கு ரூ.10
சேம்பு ரூ.12
உருளைக்கிழங்கு ரூ.07
கோவக்காய் ரூ.10
சுரக்காய் ரூ.08
நாட்டு தக்காளி ரூ.10
பெங்களூரு தக்காளி ரூ.10
பூசணி ரூ.06
நாசிக் வெங்காயம் ரூ.18
சாம்பார் வெங்காயம் ரூ.18
பட்டாணி ரூ.25
பாகற்காய் ரூ.20
காலிபிளவர் (ஒன்று) ரூ.06
பரங்கிகாய் ரூ.12
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஸ்ட்ராபெர்ரி ரூ.240
இந்தியன் ஆப்பிள் ரூ.70
வாஷிங்டன் ஆப்பிள் ரூ.80
நாவல் ஆரஞ்சு ரூ.70
இந்தியன் ஆரஞ்சு ரூ.40
சாத்துக்குடி ரூ.35
கொய்யா ரூ.20
கருப்பு திராட்சை ரூ.45
பச்சை திராட்சை ரூ.50
கணேஷ் மாதுளை ரூ.60
காபூல் மாதுளை ரூ.70
செவ்வாழைப்பழம் ரூ.15
கற்பூரவள்ளி ரூ.20
ரஸ்தாளி ரூ.20
பச்சை வாழைப்பழம் ரூ.15
பப்பாளி ரூ.09
சப்போட்டா ரூ.20
கிரினி பழம் ரூ.16
தர்பூசணி ரூ.14
நேந்திரம் பழம் ரூ.45
அத்திப்பழம் ரூ.13
மலவாழைப்பழம் ரூ.45
சீத்தா ரூ.20
ரூமேனியா ரூ.55
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லி ரூ.400
ஜாதி மல்லி ரூ.350
முல்லை ரூ.350
கனகாமரம் ரூ.500
சாம்பந்தி ரூ.80
சம்பங்கி ரூ.60
100 ரோஸ் ரூ.40
குயின் ரோஸ் ரூ.40
கோழி கொண்டை ரூ.40
வாடா மல்லி ரூ.40
செண்டு பூ ரூ.40
அரளி பூ ரூ.40
Webdunia
Publish Date: Sat, 17 Jan 2009 (10:14 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:34 IST)