பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன. ஆனால் 10.15 மணியளவில் அதிகரிக்க துவங்கியது.
காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 25.91, நிஃப்டி 23.95 புள்ளிகள் குறைந்தன.
கடந்த இரண்டு நாட்களாக பங்குச் சந்தை சரிவை சந்தித்து. இன்று நாள்முழுவதும் அடிக்கடி மாற்றங்களைச் சந்திக்கும். மதியத்திற்கு பிறகு நிலையான தன்மைக்கு வர வாய்ப்பு உண்டு.
காலை 11 மணியளவில் நிஃப்டி 27.15 புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 2800.25 ஆக அதிகரித்தது.
இதே போல் சென்செக்ஸ் 121.38 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,231.43 ஆக அதிகரித்தது.
மிட் கேப் 30.76, பி.எஸ்.இ. 500- 36.77, சுமால் கேப் 27.53 புள்ளிகள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலை 11 மணியளவில் 966 பங்குகளின் விலை அதிகரித்தும், 709 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 59 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.563.57 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.217.83 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.