Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிஃப்டி 100-சென்செக்ஸ் 296 புள்ளி சரிவு

நிஃப்டி 100-சென்செக்ஸ் 296 புள்ளி சரிவு
மும்பை , திங்கள், 12 ஜனவரி 2009 (16:32 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் குறைந்தன. இறுதிவரை முன்னேற்றம் இல்லாமல் சீராக குறைந்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 296.42 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,110.05 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 99.90 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 2,773.10 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 70.76, சுமால் கேப் 60.35, பி.எஸ்.இ 500- 99.59 புள்ளிகள் குறைந்தன.

உலக வங்கியின் பணிகளை 2011 ஆம் ஆண்டு வரை, விப்ரோ நிறுவனம் நேரடியாக பெற முடியாது என்று உலக வங்கி அறிவித்தது. இந்த தகவல் பங்குச் சந்தையில் பரவியவுடன் காலையில் விப்ரோ பங்குகள் விலை 12 விழுக்காடு வரை குறைந்தது. இதற்கு பிறகு முன்னேற்றம் ஏற்பட்டு 1 பங்கு ரூ.240.50 என்ற அளவில் விற்பனையானது. இது வெள்ளிக் கிழமை விலையை விட 4.05% குறைவு.

அதே நேரத்தில் விப்ரோ தரப்பில் இருந்து கருத்து தெரிவிக்கையில், விப்ரோவின் வருவாயில் உலக வங்கி பணிகளில் இருந்து கிடைக்கும் வருவாய் மிக சொற்பமே. அதன் முடிவால் விப்ரோவின் வருவாய், இலாபம் பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 824 பங்குகளின் விலை அதிகரித்தது. 1613 பங்குகளின் விலை குறைந்தது. 85 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு குறியீட்டு எண் 3.62%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 3.50%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 3.28%, மின் உற்பத்தி பிரிவு 3.67%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 3.63%, உலோக உற்பத்தி பிரிவு 5.62%, தொழில் நுட்ப பிரிவு 3.09%, வாகன உற்பத்தி பிரிவு 1.00%, எஸ்டேட் பிரிவு 4.87%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 5.62% குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil