Newsworld Finance Market 0901 12 1090112004_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை சரிவு

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி சாங்காய் காம்போசிட் டோவ் ஜோன்  nse bse
மும்பை: பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

காலை 10.12 மணியளவில் சென்செக்ஸ் 127.37, நிஃப்டி 44.40 புள்ளிகள் குறைந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இன்று காலையில், சில பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. சிலவற்றில் குறைந்தன.

ஹாங்காங்கினஹாங்செங் 275.86, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 19.69, ஜப்பானின் நிக்கி 39.62, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 27.39 புள்ளிகள் குறைந்து இருந்தது.

ஆனால் சீனாவின் சாங்காய் காம்போசிட் 4.62 புள்ளிகள் அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை டோவ் ஜோன் 143.28, எஸ் அண்ட் பி 500-19.38, நாஸ்டாக் 45.42 புள்ளிகள் குறைந்தது.

ஐரோப்பிய நாடுகளில் வெள்ளிக் கிழமை நெதர்லாந்து தவிர மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-56.83 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.31 மணியளவில் நிஃப்டி 86.50 புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 2786.50 ஆக குறைந்தது.

இதே போல் சென்செக்ஸ் 304.33 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 9,102.14 ஆக குறைந்தது.

மிட் கேப் 52.13, பி.எஸ்.இ. 500- 93.26, சுமால் கேப் 34.83 புள்ளிகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10. 25 மணியளவில் 415 பங்குகளின் விலை அதிகரித்தும், 954 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 38 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை ரூ.350.55 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் 13.26 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil