Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை சரிவு

பங்குச் சந்தை சரிவு
மும்பை , வெள்ளி, 9 ஜனவரி 2009 (14:54 IST)
பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிக ஏற்ற இறக்கத்துடன் துவங்கின.

காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 63.42, நிஃப்டி 21.00 புள்ளிகள் குறைந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இன்று காலையில், தென் கொரியா தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைளில் சாதகமான நிலை இருந்தது.

ஹாங்காங்கினஹாங்செங் 165.43, சீனாவின் சாங்காய் காம்போசிட் 5.34, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 17.19, ஜப்பானின் நிக்கி 7.68 புள்ளிகள் அதிகரித்தது. ஆனால் தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 13.32 புள்ளிகள் குறைந்து இருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன் 27.24 புள்ளிகள் குறைந்தது.
எஸ் அண்ட் பி 500-3.08, நாஸ்டாக் 17.95 புள்ளிகள் அதிகரித்தது.

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி தவிர மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-2.14 புள்ளிகள் குறைந்தது.

சத்யம் கம்ப்யூட்டரின் பங்குகள், சந்தையின் வர்த்கக அளவுகோள் படி குறைந்தது. எனவே மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கணக்கிடப்படும் பிரிவில் இருந்து சத்யம் கம்ப்யூட்டர் நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக சன் பார்மசூடிக்கல்ஸ் சேர்க்கப்பட்டது. இதே போல் பி.எஸ்.இ-100, பி.எஸ்.இ-200, பி.எஸ்.இ-500, பி.எஸ்.இ டெக், பி.எஸ்.இ ஐ.டி ஆகிய பிரிவுகளில் மாற்றம் செய்ய ஆலோசிக்கப்படுவதாக மும்பை பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

தேசிய பங்குச் சந்தையும் நிஃப்டி 50 பிரிவில் இருந்து, சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன பங்குகளை நீக்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக ரிலையன்ஸ் கேப்பிடல் சேர்க்கப்பட்டுள்ளது.

சி.என்.எக்ஸ் 100, எஸ்&பி சி.என்.எக்ஸ் 500, சி.என்.எக்ஸ் ஐ.டி, சி.என்.எக்ஸ் சர்வீஸ் செக்டர் ஆகிய பிரிவுதளிலும் மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது.

இதற்கு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன பங்குகளின் வர்த்தகம் பங்குச் சந்தைகளில் நிறுத்தப்பட்டது என்று பொருள் அல்ல. இதன் பங்கு விற்பனை எப்போதும் போல் தொடரும்.

காலை 10.35 மணியளவில் நிஃப்டி 42.05 புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 2873.35 ஆக குறைந்தது.

இதே போல் சென்செக்ஸ் 157.96 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 9,428.92 ஆக குறைந்தது.

மிட் கேப் 24.25, பி.எஸ்.இ. 500- 16.42 சுமால் கேப் 36.12 புள்ளிகள் அதிகரித்தன.

இன்று பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் குறைந்தாலும், அந்நிய, உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய துவங்கினால் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10. 22 மணியளவில் 316 பங்குகளின் விலை அதிகரித்தும், 1066 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 38 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் புதன்கிழமை ரூ.1,111.25 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் 505.49 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil