Publish Date: Tue, 06 Jan 2009 (17:16 IST)
Updated Date: Tue, 06 Jan 2009 (16:33 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், அடுத்த சில நிமிடங்களிலேயே குறைந்தன. இன்று நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருந்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 60.33 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,335.93 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 8.65 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3112.80 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 6.68, சுமால் கேப் 8.82 புள்ளிகள் குறைந்தன. ஆனால் பி.எஸ்.இ 500- 14.83 புள்ளிகள் உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1244 பங்குகளின் விலை அதிகரித்தது. 1271 பங்குகளின் விலை குறைந்தது. 91 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு குறியீட்டு எண் 1.62%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 0.27%, உலோக உற்பத்தி பிரிவு 2.02%, வாகன உற்பத்தி பிரிவு 1.51%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.33% அதிகரித்தது.
ரியல் எஸ்டேட் பிரிவு 3.98%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 1.78%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 0.03%, மின் உற்பத்தி பிரிவு 0.96%, தொழில் நுட்ப பிரிவு 1.47% குறைந்தது.
Webdunia
Publish Date: Tue, 06 Jan 2009 (17:16 IST)
Updated Date: Tue, 06 Jan 2009 (16:33 IST)