மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா குறைந்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.66 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய மாலை நிலவரத்தை விட 7 பைசா அதிகம்.
நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.59 பைசா.
டாலருக்கு நிகரான ஆசிய நாட்டு நாணயங்களின் மதிப்பு குறைந்தது. இதனால் பொதுத்துறை வங்கிகள் அதிக அளவு டாலரை வாங்கின. அத்துடன் இறக்குமதியாளர்களும் டாலரை வாங்கினார்கள். கடந்த மூன்று நாட்களாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தன. இன்று லாப கணக்கு பார்ப்பதற்கு, விற்பனை செய்யும். அத்துடன் அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலை இருந்ததால், டாலரின் தேவை அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதுவே டாலர் மதிப்பு அதிகரித்து, ரூபாய் மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணம்.