Newsworld Finance Market 0901 06 1090106004_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Advertiesment
நிஃப்டி சென்செக்ஸ் மலேசியா பிலிப்பைன்ஸ்
பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிக ஏற்ற இறக்கத்துடன் துவங்கின.

காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 45.29, நிஃப்டி 4 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டது.

இந்த புது வருடத்தில் இருந்து நேற்று வரை இரண்டு பங்குச் சந்தைகளிலும் தொடர்ச்சியாக மூன்று நாட்களும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தது. குறிப்பாக முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கியுள்ளன. அதே நேரத்தில் வர்த்தகம் குறைந்த அளவே நடந்துள்ளது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கள் நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், நிறுவனங்கள் மூன்றாவது காலாண்டு லாப-நஷ்ட கணக்கை வெளியிட தொடங்கும். இவற்றின் வருவாய் அதிகரித்து, இலாபம் ஈட்டக்கூடிய நிலை இல்லை. இதை பொறுத்தே அடுத்து வரும் நாட்களில் பங்குச் சந்தையின் போக்கு இருக்கும்.

இன்று நாள் முழுவதும் அதிக மாறுபாட்டுடன் இருக்கவே வாய்ப்பு உண்டு. மதியத்திற்கு பிறகு ஸ்திரத்தன்மை அடையும்.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இன்று ஹாங்காங், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது.

ஹாங்காங்கினஹாங்செங் 191.21, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 21.12 புள்ளிகள் குறைந்தது.

தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 8.66, ஜப்பானின் நிக்கி 1.68, சீனாவின் சாங்காய் காம்போசிட் 34.28 புள்ளிகள் அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன் 81.80, எஸ் அண்ட் பி 500-4.35, நாஸ்டாக் 4.18 புள்ளிகள் குறைந்தது.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் அதிகரித்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-17.85 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.30 மணியளவில் நிஃப்டி 9.90 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3,131.35 ஆக உயர்நதது.

இதே போல் சென்செக்ஸ் 46.95 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,322.55 ஆக அதிகரித்தது.

மிட் கேப் 25.70, பி.எஸ்.இ. 500- 24.33, சுமால் கேப் 26.71 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.22 மணியளவில் 935 பங்குகளின் விலை அதிகரித்தும், 543 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 46 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.469.56 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் 220.82 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.










Share this Story:

Follow Webdunia tamil