Publish Date: Mon, 05 Jan 2009 (16:35 IST)
Updated Date: Mon, 05 Jan 2009 (16:35 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், சிறிய அளவு மாற்றம் இருந்தாலும், இறுதி வரை ஏறுமுகமாக இருந்து.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 317.38 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,275.60 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 74.70 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3,121.45 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 60.46, சுமால் கேப் 46.92, பி.எஸ்.இ 500- 98.37 புள்ளிகள் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1680 பங்குகளின் விலை அதிகரித்தது. 859 பங்குகளின் விலை குறைந்தது. 74 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு குறியீட்டு எண் 3.53%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 1.78%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 5.10%, மின் உற்பத்தி பிரிவு 1.75%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 2.83%, உலோக உற்பத்தி பிரிவு 5.54%, தொழில் நுட்ப பிரிவு 1.46%, வாகன உற்பத்தி பிரிவு 1.30%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 2.40% அதிகரித்தது.
ஆனால் ரியல் எஸ்டேட் பிரிவு 0.33% குறைந்தது.
Webdunia
Publish Date: Mon, 05 Jan 2009 (16:35 IST)
Updated Date: Mon, 05 Jan 2009 (16:35 IST)