மும்பை: பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தது.
காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 149.09, நிஃப்டி 32.80 புள்ளிகள் அதிகரித்தது.
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வெள்ளிக் கிழமை அளித்த சலுகைகள் சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளன. இதனால் இன்று பங்குச் சந்தையில் அதிக அளவு பாதிப்பு இருக்காது. அதே நேரத்தில் வர்த்தக, தொழில் நிறுவனங்கள், இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டு லாப-நஷ்ட கணக்குகளை வெளியிட போகின்றன. இவை நம்பிக்கை அளிப்பதாக இருக்காது. எல்லா துறையிலும் உள்ள நிறுவனங்களின் வருவாய், இலாபம் குறையும். இதை பொறுத்து பங்குச் சந்தையின் போக்கும் இருக்கும்.
ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இன்று சாதகமான நிலை இருந்தது.
ஹாங்காங்கின் ஹாங்செங் 188.06, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 28.98, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 13.96, ஜப்பானின் நிக்கி 183.56, சீனாவின் சாங்காய் காம்போசிட் 39.04 புள்ளிகள் அதிகரித்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் புது வருடத்தின் முதன் நாளான வெள்ளிக் கிழமை டோவ் ஜோன் 258.30, எஸ் அண்ட் பி 500-28.55, நாஸ்டாக் 55.18 புள்ளிகள் அதிகரித்தது.
ஐரோப்பிய நாடுகளிலும் வெள்ளிக் கிழமை பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் அதிகரித்தது. சிலவற்றில் குறைந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-127.62 புள்ளிகள் அதிகரித்தது.
இன்று மும்பை (BSE), தேசிய பங்குச் சந்தைகளில் (NSE) எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்துள்ளன. ஆனால் இதே நிலை மாலை வரை நீடிக்கும் என்று உறுதியாக கூற முடியாது.
காலை 10.30 மணியளவில் நிஃப்டி 31.15 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3,077.90 ஆக உயர்நதது.
இதே போல் சென்செக்ஸ் 143.20 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,101.42 ஆக அதிகரித்தது.
மிட் கேப் 60.93, பி.எஸ்.இ. 500- 56.43, சுமால் கேப் 63.37 புள்ளிகள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.29 மணியளவில் 1292 பங்குகளின் விலை அதிகரித்தும், 374 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 47 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை 121.18, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் 238.52 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.