Newsworld Finance Market 0901 02 1090102068_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 55-நிஃப்டி 13 புள்ளி உயர்வு

Advertiesment
நிஃப்டி சென்செக்ஸ் தேசிய பங்குச் சந்தை மும்பை பங்குச் சந்தை BSE NSE
, வெள்ளி, 2 ஜனவரி 2009 (16:41 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறயீட்டு எண்கள் அதிகரித்தன. ஆனால் நாள் முழுவதும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 54.75 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,958.22 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் (NSE) நிஃப்டி 13.30 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3,046.75 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் (BSE) மிட் கேப் 72.08, சுமால் கேப் 60.04, பி.எஸ்.இ 500- 33.63 புள்ளிகள் உயர்ந்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1702 பங்குகளின் விலை அதிகரித்தது. 820 பங்குகளின் விலை குறைந்தது. 78 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு குறியீட்டு எண் 1.60%, ரியல் எஸ்டேட் பிரிவு 2.07%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 0.59%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 1.32, மின் உற்பத்தி பிரிவு 1.33%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 0.67%, உலோக உற்பத்தி பிரிவு 0.59%, வாகன உற்பத்தி பிரிவு 0.01% அதிகரித்தது.

ஆனால் தொழில் நுட்ப பிரிவு 0.96%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.25% குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil