Newsworld Finance Market 0901 01 1090101002_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புத்தாண்டில் ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை

Advertiesment
பங்குச்சந்தை மும்பை புத்தாண்டு முதலீட்டாளர்கள் நிஃப்டி சென்செக்ஸ்
புத்தாண்டு தினமான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவக்கியுள்ளது முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 11.40 மணியளவில் மும்பை பங்குச்சந்தைக் குறியீடு சென்செக்ஸ் 121 புள்ளிகள் உயர்ந்து 9,768 ஆக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 33 புள்ளிகள் அதிகரித்து 2,992 ஆக காணப்பட்டது.

பெரும்பாலான பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. அவற்றில் இந்தியா இன்ஃபோலைன் 8.12% உயர்வையும், எஸ்ஸார் ஆயில் நிறுவனப் பங்குகள் 6.57% உயர்வையும், என்.டி.டி.வி நிறுவனப் பங்குகள் 6.5% உயர்வையும் சந்தித்துள்ளன.

எனினும் பாரத் பெட்ரோலியம், பீனிக்ஸ் மில்ஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ரான்பாக்ஸி ஆகிய நிறுவனப் பங்குகள் 2% அதிகமான விலை சரிவை சந்தித்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil