Newsworld Finance Market 0812 31 1081231068_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 69-நிஃப்டி 20 புள்ளி சரிவு

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி
, புதன், 31 டிசம்பர் 2008 (17:47 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ஆனால் நாள் முழுவதும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. மதியம் சுமார் 1.30 மணிக்கு பிறகு குறைய துவங்கின.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 68.85 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,647.31 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 20.35 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,959.35 ஆக குறைந்தது.

அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 19.05, சுமால் கேப் 47.63 புள்ளிகள் அதிகரித்தன. ஆனால் பி.எஸ்.இ 500- 11.75 புள்ளிகள் குறைந்தது.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1499 பங்குகளின் விலை அதிகரித்தது. 935 பங்குகளின் விலை குறைந்தது. 108 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு குறியீட்டு எண் 1.29%, ரியல் எஸ்டேட் பிரிவு 0.41%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 0.05%, தொழில் நுட்ப பிரிவு 0.28%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 0.98% குறைந்தது.

மின் உற்பத்தி பிரிவு 0.27%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 0.49%, உலோக உற்பத்தி பிரிவு 0.18%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.09% வாகன உற்பத்தி பிரிவு 0.95% அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil