Newsworld Finance Market 0812 29 1081229067_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 205-நிஃப்டி 65 புள்ளி உயர்வு

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி மும்பை பங்குச் சந்தை பி எஸ் இ தேசிய பங்குச் சந்தை என் எஸ் இ
, திங்கள், 29 டிசம்பர் 2008 (16:55 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, சரிந்த குறியீட்டு எண்கள், மதியம் 1.30 மணிக்கு பிறகு சீராக அதிகரித்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 204.60 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,533.52 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 64.95 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,922.20 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 40.86, பி.எஸ்.இ 500- 72.00, சுமால் கேப் 22.97 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1289 பங்குகளின் விலை அதிகரித்தது. 1095 பங்குகளின் விலை குறைந்தது. 83 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு 3.71%, ரியல் எஸ்டேட் பிரிவு குறியிட்டு எண் 0.26%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 1.37%, தொழில் நுட்ப பிரிவு 1.97%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 2.87%, மின் உற்பத்தி பிரிவு 2.01%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 1.24%, உலோக உற்பத்தி பிரிவு 3.23%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.14% அதிகரித்தது. வாகன உற்பத்தி பிரிவு 0.63% குறைந்தது.




Share this Story:

Follow Webdunia tamil