Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூபாய் மதிப்பு 26 பைசா உயர்வு

ரூபாய் மதிப்பு 26 பைசா உயர்வு
, திங்கள், 29 டிசம்பர் 2008 (13:44 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா அதிகரித்தது.


இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.20 இருந்தது. இது வெள்ளிக் கிழமை மாலை நிலவரத்தை விட 26 பைசா குறைவு.

வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.48.45 பைசா. (வெள்ளிக் கிழமை டாலரின் மதிப்பு 39 பைசா
அதிகரித்தது குறிப்பிடத்தக்கது )

வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் அதிக அளவு டாலரை விற்பனை செய்வதைல் டாலரின் மதிப்பு சரிந்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்தாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ. 48.18 முதல் ரூ.48.30 என்ற அளவில் உள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.76 பைச
1 யூரோ மதிப்பு ரூ.69.17
100 யென் மதிப்பு ரூ.53.88
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.71.68.

Share this Story:

Follow Webdunia tamil