Publish Date: Mon, 29 Dec 2008 (12:05 IST)
Updated Date: Mon, 29 Dec 2008 (12:05 IST)
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் 10 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் சவரனுக்கு ரூ.128ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.265ம் அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இறக்கு முகமாக இருந்த தங்கத்தின் விலை இன்று மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரு சரவன் ரூ.9,928க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று சவரனுக்கு ரூ.180 உயர்ந்து ஒரு பவுன் ரூ.10,056க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,565 (நேற்று முன்தினம் ரூ.13,390)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,056 (ரூ.9,928)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,257 (ரூ.1,241)
வெள்ளி (பார்) கிலோ ரூ.18,570 (ரூ.18,305)
வெள்ளி 10 கிராம் ரூ.198.50 (ரூ.196)
வெள்ளி 1 கிராம் ரூ.19.85 (ரூ.19.6)