Newsworld Finance Market 0812 24 1081224058_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 118-நிஃப்டி 52 புள்ளி சரிவு

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி தேசிய பங்குச் சந்தை பி எஸ் இ என் எஸ் இ
, புதன், 24 டிசம்பர் 2008 (16:53 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, சரிந்த குறியீட்டு எண்கள் இறுதி வரை உயரவில்லை. ஆனால் இன்று நடந்த வர்த்தகத்தில் காலை முதல் மாலை வரை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 118.03 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 9,568.72 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 51.80 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,916.85 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 30.21, பி.எஸ்.இ 500- 36.37, சுமால் கேப் 38.98 புள்ளிகள் குறைந்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 911 பங்குகளின் விலை அதிகரித்தது. 1505 பங்குகளின் விலை குறைந்தது. 93 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு மட்டும் 1.64% அதிகரித்தது.

ரியல் எஸ்டேட் பிரிவு குறியிட்டு எண் 4.91%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 0.66%, தொழில் நுட்ப பிரிவு 2.28%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 1.46%, வாகன உற்பத்தி பிரிவு 2.38%, மின் உற்பத்தி பிரிவு 1.51%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 0.98%, உலோக உற்பத்தி பிரிவு 1.87%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.86 % குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil