Newsworld Finance Market 0812 24 1081224006_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை இன்றும் சரிவு

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி சீனா
, புதன், 24 டிசம்பர் 2008 (10:55 IST)
மும்பை: பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

காலை 10.20 மணியளவில் சென்செக்ஸ் 92.78, நிஃப்டி 21.30 புள்ளிகள் குறைந்தது.

பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது. முன்பேர சந்தையின் ஒப்பந்தம் முடிவடைவதால், இன்றும் எல்லா பிரிவுகளிலும் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். நண்பகலுக்கு பிறகு நிலைமை மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன் 100.28, எஸ் அண்ட் பி 500-8.47, நாஸ்டாக் 10.81 புள்ளிகள் குறைந்தது.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று நெகர்லாந்து, பிரிட்டன் தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-6.82 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.26 மணியளவில் நிஃப்டி 13.55 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 2,955.10 ஆக குறைந்தது.

இதே போல் சென்செக்ஸ் 41.10 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,645.59 ஆக குறைந்தது.

மிட் கேப் 20.78, பி.எஸ்.இ. 500- 14.61, சுமால் கேப் 31.35 புள்ளிகள் குறைந்தது.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இன்று சிலவற்றில் குறியீட்டு எண்கள் குறைந்தும், சிலவற்றில் அதிகரித்தும் இருந்தது.

ஹாங்காங்கினஹாங்செங் 36.65, சீனாவின் சாங்காய் காம்போசிட் 12.66, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 19.32, ஜப்பானின் நிக்கி 215.56 புள்ளிகள் குறைந்து இருந்தது.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 14.87 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.39 மணியளவில் 494 பங்குகளின் விலை அதிகரித்தும், 1045 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 49 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.264.05, கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.88.18 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil