Publish Date: Mon, 22 Dec 2008 (16:56 IST)
Updated Date: Mon, 22 Dec 2008 (16:56 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, ஏற்ற இறக்கத்துடன் துவங்கின. மதியம் 2.30 மணியளவில் தொடர்நது குறைய துவங்கின.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 171.56 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 9,928.35 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 38.30 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3,039.90 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 4.20, பி.எஸ்.இ 500- 44.35, சுமால் கேப் 9.07 புள்ளிகள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1276 பங்குகளின் விலை அதிகரித்தது. 1258 பங்குகளின் விலை குறைந்தது. 82 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் பிரிவு குறியிட்டு எண் 0.13%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 0.14%, தொழில் நுட்ப பிரிவு 0.51%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 0.14% அதிகரித்தது.
வாகன உற்பத்தி பிரிவு 1.36%, மின் உற்பத்தி பிரிவு 0.75%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 0.99%, வங்கி பிரிவு 2.48%,, உலோக உற்த்தி பிரிவு 1.52%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.52% குறைந்தது.
Webdunia
Publish Date: Mon, 22 Dec 2008 (16:56 IST)
Updated Date: Mon, 22 Dec 2008 (16:56 IST)