Publish Date: Fri, 19 Dec 2008 (16:39 IST)
Updated Date: Fri, 19 Dec 2008 (16:38 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, ஏற்ற இறக்கத்துடன் துவங்கின. இன்று இறுதி வரை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 23.48 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,099.91 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 16.75 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3,077.50 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 59.43, பி.எஸ்.இ 500- 29.31, சுமால் கேப் 32.07 புள்ளிகள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1482 பங்குகளின் விலை அதிகரித்தது. 1033 பங்குகளின் விலை குறைந்தது. 84 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் பிரிவு குறியிட்டு எண் 10.57%, வாகன உற்பத்தி பிரிவு 1.79%, மின் உற்பத்தி பிரிவு 1.01%,, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 0.85%, தொழில் நுட்ப பிரிவு 0.69%,, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 0.79%, வங்கி பிரிவு 0.20%,, உலோக உற்த்தி பிரிவு 0.12%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.08% அதிகரித்தது.
பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவ 0.63% குறைந்தது.