Newsworld Finance Market 0812 18 1081218006_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி
, வியாழன், 18 டிசம்பர் 2008 (10:51 IST)
மும்பை: பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே அதிக ஏற்ற இறக்கத்துடன் துவங்கியது.

காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 88.43 நிஃப்டி 18.15 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று அந்நிய, உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்துள்ளன. இவை இன்று பங்குகளை வாங்க துவங்கும்.

பணவீக்கம் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு பிற்பகலில் வெளியிடும். பணவீக்கம் 7.45 விழுக்காடாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய வாரத்தில் 8 விழுக்காடாக இருந்தது.

ஆசிய நாட்டு ரிசர்வ் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கும் என்று தெரிகிறது. இதனால் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன.

அதே நேரத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 44 டாலராக அதிகரித்தது. ஒபெக் நாடுகள் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தினசரி 20 லட்சம் பீப்பாய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளன. இதே போல் ஒபெக் அமைப்பில் இல்லாத ரஷியா, கஜகஸ்தான், அஜர்பைஜான் ஆகியவையும் ஜனவரி மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளன. இதன் பாதிப்பு எல்லா மட்டங்களிலும் இருக்கும் என்று தெரிகிறது.

இன்று மும்பை. தேசிய பங்குச் சந்தைகளில் அதிக மாற்றத்துடன் இருக்கும் என்று தெரிகிறது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன் 99.80, எஸ் அண்ட் பி 500-8.76, நாஸ்டாக் 10.58 புள்ளிகள் குறைந்தன.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-15.11 புள்ளிகள் அதிகரித்தன.

காலை 10.28 மணியளவில் நிஃப்டி 0.10 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 2,954.35 ஆக இருந்தது.

இதே போல் சென்செக்ஸ் 22.21 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,801.72 ஆக அதிகரித்தது.

அதே நேரத்தில் மிட் கேப் 17.38, பி.எஸ்.இ. 500- 13.09, சுமால் கேப் 6.37 புள்ளிகள் அதிகரித்தது.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஜப்பான், மலேசியா, தைவான் தவிர மற்றவைகளில் குறியீட்டு எண் குறைந்தது.

ஹாங்காங்கினஹாங்செங் 133.93, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 7.93, சீனாவின் சாங்காய் காம்போசிட் 13.14, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 0.92 புள்ளிகள் குறைந்தன.

ஜப்பானின் நிக்கி 35.92, புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.21 மணியளவில் 800 பங்குகளின் விலை அதிகரித்தும், 561 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 38 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.188.65 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.97.82 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil