Publish Date: Wed, 17 Dec 2008 (17:10 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் குறைந்தன. மதியம் 2 மணிவரை மாற்றத்துடன் இருந்த குறியீட்டு எண்கள், அதற்கு பிறகு சரிய துவங்கின.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 261.69 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,715.29 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 87.40 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,954.35 ஆக குறைந்தது.
அதே போல் மிட் கேப் 108.04, பி.எஸ்.இ 500- 103.03, சுமால் கேப் 98.09 புள்ளிகள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 956 பங்குகளின் விலை அதிகரித்தது. 1569 பங்குகளின் விலை குறைந்தது. 72 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.