மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா அதிகரித்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.47.95 ஆக இருந்தது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 8 பைசா குறைவு.
நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.03 பைசா.
வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.47.83 முதல் ரூ.48.00 என்ற அளவில் இருந்தது.
அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில், மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். நேற்று போலவே இன்றும் வங்கிகளும், ஏற்றுமதியாளர்கள் உட்பட மற்ற தரப்பினரும் டாலரை விற்பனை செய்தனர்.