Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்
, செவ்வாய், 16 டிசம்பர் 2008 (11:01 IST)
மும்பை: பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிக ஏற்ற இறகத்துடன் தொடங்கின.

காலை 10.19 மணியளவில் சென்செக்ஸ் 26.81, நிஃப்டி 1.70 புள்ளிகள் குறைந்த இருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன் 65.15, எஸ் அண்ட் பி 500-11.16, நாஸ்டாக் 32.28 புள்ளிகள் குறைந்தன.

அமெரிக்க ரிசர்வ் வங்கி இன்று இந்திய நேரப்படி மாலை வட்டி விகிதத்தை குறைக்கும் அறிவிப்பை வெளியிட உள்ளது. இது அரை விழுக்காடு வட்டி குறைக்கும் என்று தெரிகிறது. இதன் அறிவிப்பை நிதி சந்தையிலும், முதலீட்டு நிறுவனங்களும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளன. இதை பொருத்து பங்குச் சந்தையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று ஆஸ்திரியா, பெல்ஜியம், ஸ்பெயின் நாட்டு பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது. மற்றவைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-2.79 புள்ளிகள் குறைந்தன.

காலை 10.36 மணியளவில் நிஃப்டி 0.45 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,980.75 ஆக குறைந்தது.

இதே போல் சென்செக்ஸ் 32.21 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,800.18 ஆக குறைந்தது.

அதே நேரத்தில் மிட் கேப் 42.46, சுமால் கேப் 54.20, பி.எஸ்.இ. 500- 11.65 புள்ளிகள் அதிகரித்தது.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இன்று ஹாங்காங் தவிர மற்றவைகளில் குறியீட்டு எண் குறைந்தது.

ஹாங்காங்கினஹாங்செங் 452.46 புள்ளிகள் அதிகரித்தது.

ஜப்பானின் நிக்கி 94.64, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 2.71, சீனாவின் சாங்காய் காம்போசிட் 35.02, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 4.05 புள்ளிகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் 1229 பங்குகளின் விலை அதிகரித்தும், 470 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 50 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ. 230.48 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.42.72 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil