Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை உயர்வு

பங்குச் சந்தை உயர்வு
, திங்கள், 15 டிசம்பர் 2008 (11:05 IST)
மும்பை: பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

காலை 10.06 மணியளவில் சென்செக்ஸ் 220.25, நிஃப்டி 69.90 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை டோவ் ஜோன் 64.59, எஸ் அண்ட் பி 500-6.14, நாஸ்டாக் 32.84 புள்ளிகள் குறைந்தன.

ஐரோப்பிய நாடுகளில் வெள்ளிக் கிழமை எல்லா நாட்டு பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-108.34 புள்ளிகள் குறைந்தன.

காலை 10.36 மணியளவில் நிஃப்டி 59.50 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,980.85 ஆக அதிகரித்தது.

இதே போல் சென்செக்ஸ் 165.69 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,855.76 ஆக உயர்ந்தது.

அதே நேரத்தில் மிட் கேப் 84.17, சுமால் கேப் 85.58, பி.எஸ்.இ. 500- 77.03 புள்ளிகள் அதிகரித்தது.

இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளும் இன்று சாதகமான நிலை இருந்தது.

ஜப்பானின் நிக்கி 407.99, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 37.18, ஹாங்காங்கின் ஹாங்செங் 452.46, சீனாவின் சாங்காய் காம்போசிட் 8.38, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 49.48 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் 1297 பங்குகளின் விலை அதிகரித்தும், 283 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 44 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை ரூ. 16.52 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.325.81 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil