Publish Date: Mon, 15 Dec 2008 (11:03 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (11:02 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.27 பைசா அதிகரித்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.18 ஆக குறைந்தது. இது வெள்ளிக் கிழமை நிலவரத்தை விட 27 பைசா குறைவு.
வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.48.45-48.46 பைசா.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும், இந்திய பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் அதிகரிக்கின்றன. இதனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்யாது. அத்துடன் வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் டாலரை விற்பனை செய்வதால், இதன் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.