Publish Date: Fri, 12 Dec 2008 (11:34 IST)
Updated Date: Fri, 12 Dec 2008 (11:33 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.32 பைசா குறைந்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.65 ஆக அதிகரித்தது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 32 பைசா அதிகம்.
நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.33-48.34 பைசா.
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிகரித்து வந்தன. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கினார்கள். இன்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்கின்றனர்.
அத்துடன் இறக்குமதியாளர்களும் டாலரை வாங்குவதால், டாலர் மதிப்பு அதிகரித்து, ரூபாய் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65 பைசா அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.