Publish Date: Thu, 11 Dec 2008 (12:33 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.36 பைசா அதிகரித்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 23 பைசா அதிகரித்து இருந்தது. அதிக அளவு டாலர் விற்பனைக்கு வந்ததால், டாலரின் மதிப்பு மேலும் குறைந்தது.
வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.48.62 முதல் ரூ.48.63 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 36 பைசா குறைவு.
திங்கட் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.49.98 பைசா.
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிகரித்துள்ளன. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை மட்டும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தையில் 238 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதை தொடர்ந்து, அதிக அளவு அந்நியச் செலவாணி வரத்து உள்ளது.
இதனால் வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் அதிக அளவு டாலரை விற்பனை செய்கின்றனர். அத்துடன் மற்ற ஆசிய நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைவதால், இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரிப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
Webdunia
Publish Date: Thu, 11 Dec 2008 (12:33 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)