Publish Date: Thu, 11 Dec 2008 (11:18 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.23 பைசா அதிகரித்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.75 ஆக இருந்தது இது நேற்று இறுதி நிலவரத்தை விட 23 பைசா குறைவு.
திங்கட் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.49.98 பைசா.
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிகரித்ததால், வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் அதிக அளவு டாலரை விற்பனை செய்கின்றனர். அத்துடன் மற்ற ஆசிய நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைவதால், இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரிப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நேற்று மட்டும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 பைசா அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.