Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்
, வியாழன், 11 டிசம்பர் 2008 (10:48 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிக ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, சென்செக்ஸ் 7.46, நிஃப்டி 9.05 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

கடந்த இரண்டு நாட்களாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கின. செபியின் புள்ளி விபரப்படி அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 180 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன. ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் பாதகமான நிலையே நிலவியது.

அத்துடன் பணவீக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். பணவீக்கம் சென்ற வாரத்தைவிட குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலிய பொருட்கள், உற்பத்தி துறை சார்ந்த பொருட்களின் விலைகள் குறைந்துள்ளது. இதனால் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்க விகிதம் குறையும். ஆனால் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த இரண்டு நாட்களாக முதலீடு செய்த நிறுவனங்கள், இன்று பங்குகளை விற்பனை செய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால் இன்று பங்குச் சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். நண்பகலுக்கு மேல் நிலைமை மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன் 70.09, எஸ் அண்ட் பி 500-10.57, நாஸ்டாக் 18.14 புள்ளிகள் அதிகரித்தன.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று சுவிட்சர்லாந்து, பிரிட்டன் தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-13.98 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.30 மணியளவில் நிஃப்டி 10.95 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,917.20 ஆக குறைந்தது.

இதே போல் சென்செக்ஸ் 8.43 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,646.47 ஆக குறைந்தது.

அதே நேரத்தில் மிட் கேப் 33.10, சுமால் கேப் 30.88, பி.எஸ்.இ. 500- 8.41 புள்ளிகள் அதிகரித்தன.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இன்று தென்கொரியா தவிர மற்ற நாட்டு முக்கியமான பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் குறைந்தன.

ஜப்பானின் நிக்கி 32.05,சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 7.11, ஹாங்காங்கினஹாங்செங் 6.66, சீனாவின் சாங்காய் காம்போசிட் 6.42 புள்ளிகள் குறைந்தன.

தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 46.82 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.24 மணியளவில் 973 பங்குகளின் விலை அதிகரித்தும், 407 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 52 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ. 950.65 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.59.01 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil